2020 க்குள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் அபாயம்
"ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு" என்ற அந்த அறிக்கையில் இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை குறைபாட்டை அப்பட்டமாக விளக்கி இருப்பதுடன், குடிநீர் தட்டுப்பாட்டால் இந்தியா சந்திக்கப் போகும் இன்னல்களையும் அதிர்ச்சிகரமாக எடுத்துரைத்துள்ளது.
முக்கியமாக 2030 க்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின்தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர்மட்டம் 2020 க்குள் சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 21 நகரங்களில் முற்றிலும் வற்றிவிடும் எனவும் இதனால் அந்நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணமடைவதாகவும் கூறியுள்ளது.




No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.