வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் பாரதப் பிரதமரின் மருத்துவ நிவாரண உதவித் திட்டம் நடைமுறையில் உள்ளது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை என உயிர்காக்கும் அத்தனை சிகிச்சைகளுக்கும் இந்த உதவி அளிக்கப்படுகிறது.
அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகும் செலவுகள், நோயின் தன்மை, நோயாளியின் முழு விவரம் பற்றி சான்றிதழ் பெற்று அனுப்பி வைத்தால், துறை மூலமாக ஆய்வு செய்து சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே உதவித்தொகையை அனுப்பி வைப்பார்கள்.
உதவித்தொகை விரைவாக பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர், அந்தத் தொகுதி எம்.பி போன்றவர்களின் பரிந்துரைக் கடிதத்துடன் விண்ணப்பத்தை அனுப்புவது நல்லது.
எந்த நோய்க்கு உதவி கேட்கப்படுகிறதோ அந்த நோய்க்காக மாநில அரசிடம் உதவி கேட்காதபட்சத்தில் மத்திய அரசு உதவி அளிக்கும். மற்றபடி வயது, வருமான உச்சவரம்பெல்லாம் கிடையாது.

அனுப்ப வேண்டிய முகவரி
THE PRIME MINISTER'S NATIONAL RELIEF FUND (PMNRF),
PRIME MINISTER'S OFFICE,
SOUTH BLOCK,
NEW DELHI - 110011
Email :- pmnrf@gov.in
Phone :- 011-23013683
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.