May 02, 2018

கோடைக்கால பயிற்சி - 18

கோடைக்கால பயிற்சி முகாமில் சேர அழைப்பு

கோடைக்கால பயிற்சி முகாமில் சேர அழைப்பு. பயிற்சி முகாமில் வாழ்க்கையை புதிய கோணத்தில் வாமும் அனுபவம் கிடைக்கிறது.
மத்திய அரசின் விளையாட்டுத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகிய மூன்று அமைச்சகங்களும் இணைந்து தூய்மையான இந்தியா கோடைக்கால பயிற்சி -2018 முகாமிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.



கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட இளைஞர்கள், நேரு யுவ கேந்திரா இளைஞர்கள் என அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.
பயிற்சியில் சிறப்பாக செயல்படுகிறவர்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.
பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும்  'தூய்மை இந்தியா இயக்கம்' வாயிலாக ஒரு சான்றிதழும் அளிக்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழு 2 கூடுதல் புள்ளிகளையும் அளிக்கும்.



பதிவு செய்வதற்கான காலம் 25 ஏப்ரல் 2018 முதல் 15 மே 2018 வரை

மேலும் தகவல் மற்றும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள இங்கே சொடுக்கவும்


மேலும் தகவலுக்கு பின்வரும் எண்ணிற்கு Missed Call கொடுக்கவும் - 0120 2205031

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.