June 17, 2022

தைராய்டு

தைராய்டு 


தைராய்டு 

தைராய்டு சுரப்பி கழுத்தின் கீழ்ப் பகுதியின் மையத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இதிலிருந்து வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தும் ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இது உடலில் உள்ள செல்கள் எவ்வளவு சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக தைராய்டு பிரச்சினை உண்டாகிறது. உலகம் முழுவதும் பலரை பாதித்துள்ள தைராய்டு பிரச்சினை ஆண் பெண் இருபாலருக்கும் வரக்கூடியது. 
தைராய்டு அதிகப்படியாக சுரக்கும் போது ஹைப்பர் தைராய்டு பிரச்சனையும், குறைவாக சுரக்கும் போது ஹைப்போ தைராய்டு பிரச்சினையும் உண்டாகிறது. ஆண்களை விட பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை திடீரென குறைதல் மற்றும் அதிகரித்தல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு, ஞாபக மறதி, எரிச்சல், படபடப்பு, உடல் தசைகளில் பலவீனம், நடுக்கம், தூக்கமின்மை, தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்வு, கைகால் மரத்துப்போதல், மூட்டு வலி மற்றும் எரிச்சல் போன்றவை தைராய்டு நோயின் அறிகுறிகளாகும். அறிகுறிகள் இருக்கும் போது தைராய்டு நோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயின் பிடியில் இருந்து மீளலாம்.
இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.