June 18, 2017

அழகு

எது அழகு

ஆடும் போது மயில் அழகு
ஓடும் போது மான் அழகு
தாவும் போது முயல் அழகு


கூவும் போது சேவல் அழகு
பாயும் போது புலி அழகு
மேயும் போது பசு அழகு
விடியும் போது விண் அழகு
மடியும் போது அருவி அழகு
நடக்கும் போது கால் அழகு
கடக்கும் போது நதி அழகு
கொதிக்கும் போது பால் அழகு
துதிக்கும் போது பாடல் அழகு
வடிக்கும் போது சோறு அழகு
குடிக்கும் போது கூழ் அழகு
படிக்கும் போது கம்பன் அழகு
வெடிக்கும் போது பஞ்சு அழகு
வெட்டும் போது வைரம் அழகு
கொட்டும் போது முரசு அழகு
அணியும் போது நகை அழகு
தணியும் போது கோபம் அழகு
அரைக்கும் போது சந்தனம் அழகு
உரைக்கும் போது தங்கம் அழகு
நாணும் போது பெண்மை அழகு
நாண் ஏற்றும் போது வில் அழகு
நீராடும் போது ஈரம் அழகு
போராடும் போது வீரம் அழகு
காணும் போது தாய்மை அழகு
பேணும் போது ஒழுக்கம் அழகு
சிரிக்கும் போது குழந்தை அழகு
தரிக்கும் போது கர்ப்பம் அழகு
மெல்லும் போது தாம்பூலம் அழகு
சொல்லும் போது தமிழ் அழகு
உங்களுக்கு நான் அழகு
எனக்கு நீங்கள் அழகு

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.