March 18, 2018

டாஸ்மாக்கில் கூடுதல் விலையா?

டாஸ்மாக்கில் "சரக்கு, சைடு டிஷ்" சரியில்லையா, கூடுதல் விலையா? இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தமிழகம் முழுவதும் உள்ள "டாஸ்மாக்' கடைகளில், எந்த கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதோ, அந்த கடைகளைப் பற்றி, 18004252015 என்ற கட்டணமில்லாத தொலைபேசியில் நுகர்வோர் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.
இந்த தொலைபேசியில், நுகர்வோர் புகார் தெரிவிப்பதன் மூலம், அவரது தொலைபேசிக்கான கட்டணத்தை, "டாஸ்மாக்' நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு இல்லை. எனவே, நுகர்வோர் இலவசமாக புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்கும் எண் :- 18004242015


டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை மட்டுமே பார்களில் அருந்த வேண்டும். வெளியில் இருந்து உணவுப்பொருட்களை கொண்டுவரக்கூடாது. அதிக நேரம் பாரில் அமர்ந்து மது அருந்துக் கூடாது. பார்களில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அவர்களை பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். 

பார்களில் அடுப்பு வைத்து சமைக்கக் கூடாது. வெளியில் இருந்து சமைத்து, உணவுகளை உள்ளே கொண்டு வந்து விற்க வேண்டும். பார்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் விலை பற்றி புகார் இருந்தால், டாஸ்மாக் நிறுவனத்தின் இலவச கட்டண தொலைப்பேசி எண் 1800 425 2015 மூலம் தொடர்பு கொள்ளலாம் 

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.