April 11, 2024

SSC-CHSLE-2024

ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) அளவிலான பணிகளுக்கான தேர்வு-2024 தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) "ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024"-க்கான அறிவிப்பை 08.04.2024 அன்று வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் எழுத்தர் / இளநிலை செயலக உதவியாளர் போன்ற 'சி' பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.


தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.05.2024 (23:00 மணிவரை).

இணைய தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08.05.2024 (23:00 மணி வரை).

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்: ஆந்திராவில் 10 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள்; தெலுங்கானாவில் 03 மையங்களில் தேர்வு நடைபெறும்.

ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (10+2) நிலையிலான பணியாளர் தேர்வு- 2024"-க்கான அறிவிப்பை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்



Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.