April 02, 2024

உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வு அறிவிப்பு 2024

TNSET மாநில தகுதி தேர்வு 2024


தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான உதவி பேராசிரியர் பணிகளுக்கான SET(State Eligibility Test) தகுதி தேர்வுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி 2024 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக  பணியில் சேர நெட் (NET-NATIONAL LEVEL ELIGIBILITY TEST)
அல்லது செட்(SET-STATE LEVEL ELIGIBILITY TEST) தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Phd முடித்திருக்க வேண்டும்.

2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செட் தகுதி தேர்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் 
சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், உளவியல் போன்ற 43 பாடப்பிரிவுக்கான செட் தகுதித்தேர்வு ஜூன் 3 ஆம் தேதி கணினிவழியில் தேர்வு நடத்தப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தகுதி:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ‌.SC,ST வகுப்பினர்  மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் காலம்:
01 ஏப்ரல் 2024 முதல் 30 ஏப்ரல் 2024 வரை 

தேர்வு கட்டணம்:

பொதுப் பிரிவுக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 2500 எனவும், BC,MBC,DNC வகுப்புக்கு ரூபாய் 2000 எனவும்,SC,ST பிரிவினருக்கு ரூபாய் 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் மூன்றாம் பாலினித்தவர் கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.

தேர்வு நாள்:
03 ஜீன் 2024 முதல் 04 ஜீன் 2024 வரை


SET தேர்வுக்கு விண்ணப்பிக்க👇
SET notification Download செய்ய👇


Join Social
Join Telegram
Join WhatsApp
Join Facebook
Join YouTube
Join Koo
Join Twitter

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.