தொடக்கக்கல்வியில் 2017-2018ல் பணி மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாதவர்களை விடுவித்தல்
தொடக்கக்கல்வி துறையில்2017-18 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் தொடர்பான அறிவுரை வழங்குதல் சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தொடக்கக்கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2017-18 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளவர்கள் அரசு கடித எண்.275 பள்ளிக்கல்வி 5(1) துறை நாள்.16.04.2018 ன் படி கீழ்காண் நடைமுறையினை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதலில் மாறுதல் ஆணை பெற்று ஈராசிரியர் பணிபுரியும் பள்ளிகளில் விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை 15.04.2018 க்கு பின்னர் பணியிலிருந்து விடுவிக்குமாறும் 19.04.2018 க்குள் புதிய பணியிடத்தில் சேர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.