April 01, 2018

பொது இடத்தில் சாதி பெயரை சொல்லி திட்டினால் தான் குற்றம்

பொது இடத்தில் சாதி பெயரை சொல்லி திட்டினால் மட்டுமே அது ஒரு குற்றம் என்று மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது.மகாராஷ்டிரா மாநிலம் சத்தாராவில் வசித்து வருபவர் சுனில் மதானே. அரசு ஊழியரான சுனிலுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இந்து மகர் வகுப்பை சேர்ந்த தலித் பெண் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. சுனில் அந்தபெண்ணை சாதி பெயரை சொல்லிதிட்டியதாக தெரிகிறது.
இதுபற்றிய புகாரின்பேரில் சுனிலுக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சுனிலின் முன் ஜாமீனை செசன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தர்மாதிகாரி மற்றும் பிரகாஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் தன்னை தவறாக சேர்த்துள்ளதாகவும் தான் கைது செய்யப்பட்டால் வேலை போய்விடும் என்றும் சுனில் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் பொது இடத்தில் வைத்து சாதி பெயரை சொல்லி திட்டினால் மட்டுமே அது குற்றம் என்று கூறினர். மேலும், “போலீசில் கொடுக்கப்பட்டிருக்கும் புகாரை வைத்து பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் பொது இடத்தில் வைத்து அந்த பெண்ணை திட்டியதாக தெரியவில்லை” என்றும் நீதிபதிகள் கூறினர்.

No comments:

Post a Comment

* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.