வாய் அசைவு மூலம் சத்தமின்றி பேசுவதை கேட்க செய்யும் கருவி:அமெரிக்க இந்தியர் அசத்தல்
சத்தமின்றி பேசுவதை கேட்கச் செய்யும் ‘ஆல்டெர்இகோ’ என்ற ஹெட்செட் கருவியை அமெரிக்க இந்தியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க இந்தியர் அர்னவ் கபூர். அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தில்(எம்ஐடி) ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர் ‘ஆல்டர்இகோ’ என்ற ஹெட்செட் கருவியை கண்டுபிடித்துள்ளார். காதிலிருந்து, தாடை வரை பொருத்தும் வகையில் இந்த கருவி உள்ளது. இதில் சென்சார்கள் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.சத்தம் வெளியே கேட்காமல் நாம் பேசும்போது, தாடை மற்றும் கழுத்து பகுதி அசைவு மூலம் ஏற்படும் எலக்ட்ரிக்கல் தூண்டுதல்களை இந்த சென்சார்கள் கருவிகள் கடத்தி, கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்லும். அங்கு அவை வார்த்தைகளாக மாற்றப்படும். ஆல்டர்இகோ கருவி வார்த்தைகளை ஒலியாக பரப்பாது. வார்த்தையின் அதிர்வலைகள் கேட்கும் நபருக்கு தாடை எலும்பு மூலமாக தெரிவிக்கப்படும்.
மண்டையோட்டு எலும்பு மூலமாக வார்த்தைகளை தெரிவிக்கும் ஸ்பீக்கர் கருவிகள் ராணுவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அது பொது மக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு வந்துள்ளது. சத்தமின்றி வாய் அசைவு மூலம் பேசுவதையும், மண்டையோடு மூலம் ஒலிகடத்தும் தொழில்நுட்பத்தையும் இணைப்பது சத்தம் இல்லா தகவல் தொடர்புக்கு வழிவகுக்கிறது.
சினிமா தியேட்டர்களில் படம் பார்க்கும்போது, போன் அழைப்பு வந்தால், அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் சத்தமின்றி பேசி, தகவல் தெரிவிக்க முடியும். அதிகம் சத்தம் கேட்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், ஆல்டர்இகோ ஹெட்செட் பயன்படுத்தினால், சத்தமின்றி அமைதியாக பேசலாம்.
No comments:
Post a Comment
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.